சாலையை கடக்க முயன்ற மாணவர் மினி லாரி மோதி பலி

கோவை தொண்டாமுத்தூரில் மினி லாரி மோதி 9 ஆம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சாலையை கடக்க முயன்ற மாணவர் மினி லாரி மோதி பலி

கோவை தொண்டாமுத்தூரில் மினி லாரி மோதி 9 ஆம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி நவாவூர்‌பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பி.பி.மொகந்தி (45). இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள செயற்கை கால் பெறுத்தும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் நயன்மொந்தி (14) சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் வீட்டில் இருந்து இருந்த நயன்மொந்தி, காலை 11 மணியளவில் எதிரே உள்ள மளிகை கடைக்கு பொருள் வாங்க சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது அங்கு கனுவாயிலிருந்து நவாவூர் நோக்கி வந்த சரக்கு மினி லாரி மாணவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணவர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து மாணவரின் தந்தை வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newst.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP