பள்ளி மாணவர்களின் கதைகள் - புத்தகமாக வெளியீடு!

பள்ளி மாணவ, மாணவிகள் எழுதிய சிறந்த கதைகளை நூலாக தொகுத்து வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது.
 | 

பள்ளி மாணவர்களின் கதைகள் - புத்தகமாக வெளியீடு!

பள்ளி மாணவ, மாணவிகள் எழுதிய சிறந்த கதைகளை நூலாக தொகுத்து வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கான கதை எழுதும் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் சப்னா புக் ஹவுஸ் (sapna book house) மற்றும் திஃங்க் இங்ஃக்  (think ink) ஆகியவை சார்பில் நடத்தப்பட்டது. இதற்காக பள்ளிகளில் பிரத்யேக பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் கதைகளை எழுதி இந்த பெட்டிகளில் போட்டிருந்தனர். 

இந்த கதைகளை சப்னா புக் ஹவுஸில் இருந்து ஒரு சிறப்பு ஆசிரியர் குழு பகுப்பாய்வு செய்து பட்டியலிட்டது. இதில் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட கதைகளை "எனக்குள் ஒரு எழுத்தாளர்" என்ற புத்தகமாக தொகுத்து வெளியிடும் விழா கோவையில் இன்று நடைபெற்றது.

இதில் கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையாளர் விஜய கார்த்திகேயன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். மேலும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு சான்றிதழ்கள்  வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP