கும்பகோணத்தில் சிவாஜிக்கு சிலை: ரசிகர்கள் கோரிக்கை

கும்பகோணத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்று, சிவாஜியின் 91-ஆவது பிறந்த நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 | 

கும்பகோணத்தில், உலக புகழ் பெற்ற  நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். மகாமக குளக்கரையில் சிவாஜி ரசிகர் சங்க நிர்வாகி சேகர் தலைமையில் நடந்த விழாவில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவாஜியின் திருவுருவப்படத்திற்கு மலர் கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், 91 தேங்காய்களை உடைத்து கற்பூரம் ஏற்றி ரசிகர்கள்  மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கும்பகோணத்தில் பல்வேறு நாடகங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர். அவரது நினைவாக நகரில் சிவாஜியின முழு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்ச்சியில்  ஏராளமான சிவாஜி ரசிகர்கள் பங்கேற்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP