ஸ்ரீரங்கம் கோவில் முறைகேடு குறித்து தகவல் பரப்பியவர் கைது!

ஸ்ரீரங்கம் கோயிலில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு தகவல்களை தெரிவித்து வந்த ரங்கராஜன் என்பவரை போலீசார் அவதூறு செய்திகளை பரப்பியதாக கூறி கைது செய்துள்ளனர்.
 | 

108 வைணவ தலங்களில் முதன்மையானது பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் ஆலயத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், இதுகுறித்து அறநிலையத்துறை மற்றும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் சமீப காலமாக பல தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் குறித்தும் கோவில் புராதாணங்களை பற்றியும் அவதூறு செய்தி பரப்புவதாக கோவில் இணை ஆணையர் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில், சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்களை பரப்பிய ரங்கராஜன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

ஸ்ரீரங்கம் கோவில் முறைகேடு குறித்து தகவல் பரப்பியவர் கைது!

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP