ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேர் திருவிழா !

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்திருவிழாவை முன்னிட்டு , பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து தேரை வடம்பிடித்து இழுத்தனர்
 | 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேர் திருவிழா !

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து தேரை வடம்பிடித்து இழுத்தனர்

 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் அதன்படி கடந்த ஏப்ரல் 25ம்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது நம்பெருமாள் கருடவாகனம், யாளிவாகனம், யானை வாகனம், தங்ககுதிரை வாகனம், பூந்தேர், கற்பகவிருட்சவாகனம் என தினசரி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேர் திருவிழா !

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 9ம் நாளான இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நம்பெருமாள் அதிகாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பெரியதிருத்தேரில்; எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். தேரானது 4சித்திரை வீதிகளில் வலம்வந்து மூலஸ்தானம் சென்றடைந்தது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை என பல மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP