நெல்லை தைப்பூச மண்டபத்தில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை: 5000 தம்பதியர்கள் பங்கேற்பு!

நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத், தாமிரபரணி புஷ்கர விழா குழு ,ஸ்ரீ ஜெயேந்திர பொன்விழா மேல்நிலைப்பள்ளி, இணைந்து இல்லங்களை இனிமையாகும் சகல சௌபாக்கியங்களும் தரும் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 | 

நெல்லை தைப்பூச மண்டபத்தில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை: 5000 தம்பதியர்கள் பங்கேற்பு!

நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத், தாமிரபரணி புஷ்கர விழா குழு ,ஸ்ரீ ஜெயேந்திர பொன்விழா மேல்நிலைப்பள்ளி, இணைந்து இல்லங்களை இனிமையாகும் சகல சௌபாக்கியங்களும் தரும் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 5000 தம்பதிகள்  பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்

ஸ்ரீ சத்ய நாராயண பூஜை என்பது பகவான் மகாவிஷ்ணுவிடம் கணவனும் மனைவியும் சேர்ந்து தம்பதியராய் முழு நம்பிக்கையுடன் செய்யும் ஸ்ரீ சத்ய நாராயண பூஜையால் கலியுகத்தில் மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களும், கஷ்டங்களும், வேதனைகளும், ஆரோக்கிய குறைபாடுகளும் இந்த பூஜைகள் மூலமாக விடுபட முடியும். இறையருளால் அமைதியும், மகிழ்ச்சியும், குழந்தை பாக்கியம், மனைவி தீர்க்கசுமங்கலியாகவும் , வியாபாரம், கல்வி அபிவிருத்தி அடையவும், நினைத்தது நிறைவேறவும் ,புகழ், கௌரவம், செல்வம், அந்தஸ்து, பட்டம், பதவி என அனைத்தும் இந்த பூஜையின் மூலம் பெறலாம் என்பது நம்பிக்கை.

நெல்லை தைப்பூச மண்டபத்தில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை: 5000 தம்பதியர்கள் பங்கேற்பு!

தைப்பூச மண்டபத்தில் நடைபெற்ற இந்த சத்யநாராயண பூஜை அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் வேதாந்தஜி தலைமையில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட விஸ்வ ஹிந்துபரிசத் தலைவர் சங்கர், ஜெயேந்திரா பள்ளி தாளாளர் உஷா ராமன் ,நாங்குநேரி ஜீயர், திருக்குறுங்குடி ஜீயர், ஆழ்வார்திருநகரி ஜீயர்,  செங்கோல் ஆதீனம் ,ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மாசாண மூர்த்தி, ஆகியோர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.  

மாலை 3 மணி அளவில் தொடங்கி இரவு 7 மணி அளவில் பூஜை நிறைவு பெற்றது. முன்னதாக கணபதி ஹோமம் , கோ பூஜை ,நவக்கிரக பூஜை, செய்து அதன் பின்னர் ஸ்ரீ சத்ய நாராயணா பூஜை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் வேத பாராயணம், திருமுறை பாராயணம் செய்யப்பட்டது.  இந்த பூஜைக்கு உரிய பொருட்களான ஸ்ரீ சத்ய நாராயண சுவாமிகள் படம், அரிசி ,தேங்காய், குங்குமம் ,சூடம், பத்தி, மஞ்சள், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட பொருட்களை குழுவினரே வழங்கினார்.

நிகழ்ச்சியில் நிறைவாக அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது . வடமாநிலங்களில் கிரகப்பிரவேசம், கல்யாணம் முதலிய குடும்ப விழாக்களில் அடிக்கடி இப் பூஜை நடத்தப்படும், ஸ்ரீ சத்ய நாராயணா பூஜை தமிழகத்தில் குழுக்களாக அவ்வப்போது பிரார்த்தனைகளாக நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற இந்த பூஜையானது உலக மக்கள் நலம் பெறவும், எங்கும் சாந்தியும், அனைவருக்கும் சந்தோசமாகவும், தனிமனித நலம், பொதுநலம் முதலிய நோக்கங்களுக்காக நடத்தப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP