இந்திய குடியுரிமை கோரி இலங்கை அகதிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

இந்திய குடியுரிமை அளிக்கக் கோரி 200க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
 | 

இந்திய குடியுரிமை கோரி இலங்கை அகதிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

இந்தியக் குடியுரிமை அளிக்கக் கோரி 200க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். 

மதுரை மாவட்டம் உச்சபட்டி பகுதியில் கடந்த 29 வருடங்களாக இலங்கையை சேர்ந்த 457 குடும்பத்தினர் அகதிகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின்  சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு வாழ்வதற்கு ஏற்ப வசதிகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளன.  

தொடர்ந்து 29 ஆண்டுகளாக வசித்து வரும் இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை இல்லாததால் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்கள் வாங்குதல், அரசு தேர்வு எழுத இயலாதது என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது எனவும், இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அனைவரும் அகதிகளாக தான் பதிவு செய்யப்பட்டு இங்கு வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர், அதுமட்டுமின்றி அத்தகையவர்களுக்கு , இந்தியர்கள் என்ற அந்தஸ்து அல்லாமல் அகதிகள் என்ற அந்தஸ்து மட்டுமே இருப்பதால் அரசு வேலையும் சில தனியார் வேலையும் கிடைப்பதில்லை.

மேற்படிப்பு தொடங்குவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. உயர் கல்வி படித்தவர்கள் கூட கூலித் தொழில் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே அகதிகளாகிய எங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பெருக்கிக்கொள்ள சக மனிதர்களாக மதித்து, எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP