மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் வெட்டி கொலை!

கோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை, மாமனார் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் வெட்டி கொலை!

கோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை, மாமனார்  கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இடையர்பாளையத்தை அடுத்த சோப்பு கம்பெனி  பகுதியைச்சேர்ந்தவர் ராஜேந்திரன். பெயிண்டரான இவர் கவுண்டம்பாளையம் சக்தி நகரைச் சேரந்த தங்கமணி என்பவரது மகள் ஷாலினியை கடந்த ஒரு வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பத்து மாத நிறைமாத கர்ப்பிணியான ஷாலினி பிரசவத்திற்காக கடந்த இரு தினங்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஷாலினிக்கு போதிய அளவு இரத்தம் இல்லாத்தால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க இயலாது என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

கடந்த சில மாதங்களாக ராஜேந்திரன் சரியாக வேலைக்கு செல்வதில்லை என கூறப்படுகிறது.இதனால் மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஷாலினி கவுண்டம்பாளையம் செட்டியார் அம்மா பகுதியிலுள்ள  ஷாலினியின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். ஷாலினியை தேடிச் சென்ற ரஜேந்திரன்  தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

அப்போது ஷாலினியின் தாய் மீனா சரியாக வேலைக்கு செல்லாதவனுடன் தன் மகளை அனுப்ப முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் மாமியாரின் கன்னத்தில் அறைந்து விட்டு அப்பகுதியை விட்டு சென்றுள்ளார். இது குறித்து மீனா தனது கணவரான தங்கமணி குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தங்கமணி மருமகனான ராஜேந்திரனிடம் விசாரித்த போது இருவருக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த தங்கமணி ராஜேந்திரனின் முதுகில் தான் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதனால் ராஜேந்திரன் உயிருக்கு பயந்து ஓடியுள்ளார். ஆனால் தங்கமணி துரத்தி சென்று தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வயிற்றில் குத்தினார். 

ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ராஜேந்திரனை பரசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிசெய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற துடியலூர் காவல் நிலைய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தங்கமணியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில்  பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஷாலினிக்கு கோவை அரசு மருத்துவமனையில்  ஆண்குழந்தை பிறந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP