கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் நிறுவன மோசடி வழக்கில் மூவர் குற்றவாளி !

கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் நிறுவன மோசடி வழக்கில் கைதான நடிகை சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய மூவரையும் குற்றவாளியாக கோவை 6வது நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
 | 

கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் நிறுவன மோசடி வழக்கில் மூவர் குற்றவாளி !

கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் நிறுவன மோசடி வழக்கில் கைதான நடிகை சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய மூவரையும் குற்றவாளியாக கோவை 6வது நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதா நாயர். இந்த விவகாரம்‌ தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை சரிதா நாயர்‌, பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில்‌ விடுவிக்கப்பட்டார்‌. சிறையில் இருந்து வெளியே வந்த அவர்‌, காங்கிரஸ்‌ அரசில்‌ அமைச்சர்களாக இருந்த பலரும்‌ பண மோசடி செய்ததாக குற்றம்‌ சாட்டினார்‌.

மேலும்‌, அப்போதைய முதல்வர்‌ உம்மன்சாண்டி, காங்கிரஸ்‌ எம்‌.எல்‌.ஏ. ஹிபி ஈடன்‌ ஆகியோர்‌ தனக்கு பாலியல்‌ தொல்லை கொடுத்ததாகவும்‌ கூறினார்‌. இந்த விவகாரம்‌ பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு அம்மாநில நீதிமன்றத்தில்‌ விசாரணையில்‌ உள்ளது.

இந்த நிலையில், இவர் கடந்த 2009ம் ஆண்டு கோவை வடவள்ளியில் ‘ஐசிஎம்எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார். அப்போது, காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜனிடம் ரூ.28 லட்சம், ஊட்டியை சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கட் ரமணன் மற்றும் ஜோயோவிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 6வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சோலார் பேனல் நிறுவன மோசடி வழக்கில் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய மூவரையும் குற்றவாளியாக என நீதிபதி திரிபு அறிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP