சமூகசேவகர் ஜெகதீஷ் காலமானார்

பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்த இணையதள வடிவமைப்பாளர் ஜெகதீஷ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
 | 

சமூகசேவகர் ஜெகதீஷ் காலமானார்

பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்த  இணையதள வடிவமைப்பாளர் ஜெகதீஷ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

கோவையைச் சேர்ந்த இணையதள வடிவமைப்பாளர் ஜெகதீஷ் என்ற ஜக்கு. அவருக்கு வயது (28). மாற்றுத்திறனாளியான இவர் தினமும் பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார். உடலில் உள்ள குறையை குறையாக நினைக்காமல் தன்னிடம் உள்ள திறமைகளை கொண்டு நிறையாக வாழ்ந்தவர் என்று சொன்னால் மிகையாகாது.

சமூகசேவகர் ஜெகதீஷ் காலமானார்

இவர் சமூக சிந்தனையுடன் தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர் சமூக ஆர்வலர், வலைப்பதிவாளர், இணையதள வடிவமைப்பாளர் ,எழுத்தாளர் என பல பரிணாமம் கொண்டவர். அதேபோல சிறந்த வாசிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், போன்ற பல அடையாளங்களையும் கொண்டவர்.

ஜெகதீஷ் கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளார். மேலும் கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து நண்பர்களிடம், உறவினர்களிடம், மக்களிடமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளார். இவரின் சமூக சேவைக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.

சமூகசேவகர் ஜெகதீஷ் காலமானார்

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து உளவியல் ஆலோசனை, அவர்களின் தாழ்வு மனப்பான்மையை போக்கி, அவர்களின் ஆற்றலை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்த உதவி வந்தவர் ஜெகதீஷ். இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம், ஜல்லிக்கட்டு போராட்டம் என சமூக பிரச்னைகளுக்காக நடக்கும் போராட்டத்தில் பங்கெடுப்பதிலும் முதன்மையாக் இருந்தவர்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் தற்போது உடல்நிலை மோசமாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

newsmt.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP