சமூக ஆர்வலர்கள் கொலை: 6 பேர் நீதிமன்றத்தில் சரண்!

கரூர் மாவட்டத்தில் சமூக ஆர்வலர்களை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேர் மதுரை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
 | 

சமூக ஆர்வலர்கள் கொலை: 6 பேர் நீதிமன்றத்தில் சரண்!

கரூர் மாவட்டத்தில் சமூக ஆர்வலர்களை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேர் மதுரை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 

திருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்தவர் ராமர் (எ) வீரமலை. இவர்  கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா முதலைப்பட்டியில் வசித்து வந்தார். இவருக்கு தாமரை என்ற மனைவியும்,  வாண்டை (எ) நல்லதம்பி (45) என்ற மகன் மற்றும் சரஸ்வதி, அன்னலட்சுமி என இரு மகள்கள் உள்ளனர்.

இவர்களில் நல்லதம்பிக்கு மட்டும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. நல்லதம்பி முதலைப்பட்டியில் ராமருக்கு சொந்தமான தோட்டத்தில் பூக்கள் பயிரிட்டு வந்தார். சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்ட நல்லதம்பி, பொதுமக்கள் உபயோகப்படுத்தி வந்த ஏரியை 70க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்ததை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கில், ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதியானதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் நேற்று முன்தினம் பூக்களை விற்கசென்ற நல்லதம்பியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு சென்றனர். 

இதையடுத்து, அந்த கும்பல் அவரது வீட்டிற்கு சென்று ராமரையும் அவரது பேரன் கண்முன்னே சராமரியாக வெட்டிவிட்டு தப்பிசென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய முதலைப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்ற செளந்தர்ராஜன் (36), பிரபாகரன் (27), கவியரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22) ஆகிய 6 பேர் இன்று மதுரை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP