இவ்வளவு பெருசா! - எகிப்து வெங்காயத்துக்கு வந்த சோதனை

இவ்வளவு பெருசா! - எகிப்து வெங்காயத்துக்கு வந்த சோதனை
 | 

இவ்வளவு பெருசா! - எகிப்து வெங்காயத்துக்கு வந்த சோதனை

வெங்காய தட்டுப்பாடு நிலவினாலும் எகிப்து வெங்காயத்தை வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்  எகிப்து நாட்டில் இருந்து வெங்காயத்தை அரசு இறக்குமதி செய்து வருகிறது. அதன்படி  எகிப்திலிருந்து திருச்சி வெங்காய மார்க்கெட்டுக்கு 30 டன் பெரிய வெங்காயம் வந்துள்ளது. இந்த வெங்காயம் கிலோ ரூ. 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வளவு பெருசா! - எகிப்து வெங்காயத்துக்கு வந்த சோதனைவெங்காய தட்டுப்பாடு நிலவினாலும் எகிப்து வெங்காயத்தை வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அளவில் மிகப்பெரிய வெங்காயமாக இருப்பதால் ஒருகிலோவுக்கு 3 முதல் 4 வெங்காயம் மட்டுமே இருப்பதாகவும், அதனால் இதனை வீட்டில் பயன்படுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டாததே இதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், ஹோட்டல் உரிமையாளர்கள் எகிப்து வெங்காயத்தை ஆர்வமுடன் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். மேலும் வீட்டின் சுப நிகழ்ச்சிகள், விழாக்கள் நடைபெறும் இடைங்களில் சமையலுக்கு பயன்படுத்தவும் எகிப்து நாட்டின் பெரிய வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர். எனினும் விரைவில் இந்திய நாட்டின் வெங்காயம் மக்கள் தேவைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP