ஷூவுக்குள் பாம்பு.. கடி வாங்கிய மனைவி...

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. எனவே மக்கள் உசாராக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.
 | 

சென்னை கே.கே. நகரை அடுத்த கன்னிகாபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் பழனி(38).  இவரது மனைவி சுமித்ரா (35) நேற்று முன் தினம் இரவு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கழிப்பறை அருகில் இருந்த ஷூவை எடுத்து வேறு இடத்துக்கு மாற்றியுள்ளார். அப்போது ஷூவில் இருந்த பாம்பு ஒன்று சுமித்ராவின் கையில் கொத்தியது. அதிர்ச்சியடைந்த அவர் வலியால் சத்தம்போட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த கணவர், அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சுமித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP