ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது!

சென்னை ஏ.டி.எம்., இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் திருடி வந்த வெளிநாட்டு கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 | 

ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு: 3 வெளிநாட்டவர் கைது!

சென்னை ஏ.டி.எம்., இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் திருடி வந்த வெளிநாட்டு கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை துரைப்பாக்கத்தை அடுத்து கண்ணகி நகரில் ஸ்கிம்மர் கருவி வைத்திருந்த பல்கேரியா நாட்டை சேர்ந்த நிகோலா, போரிஸ் லியூம்பாபி ஆகிய 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த ஸ்கிம்மர் கருவிகள், 40 ஏடிஎம் கார்டுகள், ரூ.7 லட்சம் மற்றும் அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர். 

மேலும், அயனாவரம் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தியது இவர்கள்தானா என்பது குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஏற்கனவே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீலாங்கரையில் பல்கேரியா நாட்டை சேர்ந்த 2 பேர் ஸ்கிம்மர் கருவியுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP