சிவகங்கை - 5 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

சிவகங்கை - 5 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர் முத்துராமலிங்கத் தேவர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பிறந்தார். இவரது பிறந்த நாளான அக்டோபர் 30 தேதியை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடிவருகிறது. நாளை பசும்பேன் முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP