திருச்சியில் சிலம்பம் தகுதிப்பட்டை வழங்கும் விழா!

திருச்சியில் சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் சிலம்பாட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தகுதி பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா இன்று திருச்சியில் நடைபெற்றது.
 | 

இதில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500- க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

திருச்சியில் சிலம்பம் தகுதிப்பட்டை வழங்கும் விழா!

இந்த  சிலம்பாட்ட தேர்வில் பங்குபெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களது தகுதிக்கேற்ப சிலம்பாட்டத்தில் பல்வேறு தற்காப்பு கலைகளை, சிலம்பம் உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சங்கர் முன்னிலையில், சிலம்பாட்ட பாடத்திட்டத்தின் படி, சரியான முறையில் செய்து காண்பித்தது, பார்வையாளர்களை வியப்படையச் செய்தது.

திருச்சியில் சிலம்பம் தகுதிப்பட்டை வழங்கும் விழா!

இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் தகுதி பட்டையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP