காவிரி ஆற்றில் மூழ்கி அக்கா - தம்பி உயிழப்பு!

திருச்சியில் முக்கொம்பு காவிரியில் ஆற்றில் மூழ்கி அக்கா, தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

காவிரி ஆற்றில் மூழ்கி அக்கா - தம்பி உயிழப்பு!

திருச்சியில் முக்கொம்பு காவிரியில் ஆற்றில் மூழ்கி அக்கா, தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த ரெங்கசாமி மற்றும் முத்துக்கண்ணு தம்பதியினரின் மகன் தரண் மற்றும் மகள் கிருத்திகா ஆகியோர் விடுமுறையையொட்டி, அவரது சித்தி சந்திரா வீட்டிற்கு வந்துள்ளனர். இதையடுத்து சந்திரா அவரது மகன் ஹரிகர தீபக் மற்றும் முத்துக்கண்ணு, அவரது குழந்தைகள் ஆகிய 5 பேரும் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளார். 

காவிரி ஆற்றில் மூழ்கி அக்கா - தம்பி உயிழப்பு!

அதை தொடர்ந்து அருகில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி அங்கு குடிநீருக்காக திறந்துவிடப்பட்டு தேங்கியிருந்த தண்ணீரில் 5 பேரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச்சென்ற கிருத்திகா, தரண், ஹரிஹரதீபக் ஆகியோர் நீரில் மூழ்கினர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட சந்திரா, முத்துக்கண்ணுவின் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து தண்ணீரில் மூழ்கிய 3பேரையும் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கிருத்திகா மற்றும் ஹரிஹர தீபக் ஆகியோர் வழியிலேயே உயிரிழந்தனர். தரணுக்கு அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP