இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு! வரம்பு மீறிய கல்லூரி பேராசிரியர்!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!வரம்பு மீறிய கல்லூரி பேராசிரியர்!
 | 

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு! வரம்பு மீறிய கல்லூரி பேராசிரியர்!

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஆறுமுகம். அங்கு துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவரிடம் இவர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அந்த பெண் ஆறுமுகம் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியிடம் கடந்த மாதம் புகார் அளித்துள்ளார்.

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு! வரம்பு மீறிய கல்லூரி பேராசிரியர்!

ஆனால், நிர்வாகம் அந்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பேராசிரியர் ஆறுமுகம் மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP