சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை தெப்ப உற்சவம் !

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை தெப்ப உற்சவம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 12 மணிக்கு பல்லக்கில்அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம்சென்றடைந்து மாலை 5 மணிக்கு அபிஷேகம்கண்டருளி இரவு 8 மணிக்கு தெப்பம் உற்சவம்கண்டு வழி நடை கண்டருளி மூலஸ்தானம்சேர்தல் நடைபெற்றது.
 | 

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை தெப்ப உற்சவம் !

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி  பெற்ற ஸ்தலமாக சமயபுரம்மாரியம்மன் கோயில் ஆகும். 

இப் பிரசித்திப்பெற்ற கோயிலில்அமைந்துள்ள அருள்மிகு அம்மன்உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும்பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அனுகாது, சகலசௌபாக்கியங்களும் கிடைக்க  வேண்டும் என்பதற்காக  மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல்பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்மன்தன்னைத் தானே வருத்திக் கொண்டு 28 நாட்கள்பச்சை பட்டினி  விரதம் இருப்பது இத் தலத்தின்சிறப்பு.  பச்சை பட்டி விரதம்பூரணம் அடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள  சர்வ சக்தியையும்பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய ஐந்தொழில்களையும் சித்திரை திருவிழா நாட்களில் அம்மன் செய்வதாக ஐதீகம்.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை தெப்ப உற்சவம் !

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேரோட்ட திருவிழா சிறப்புவாய்ந்ததாகும்.  நிகழாண்டில்  தேரோட்டகொடியேற்றம்  7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலில் அமைந்துள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க அம்மன் படம் பொருந்திய கொடியினை ஏற்றினர்.

இதனைத்தொடர்ந்து  8 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை தினசரி காலை 10  மணிக்கு பல்லாக்கில் அம்மன் புறப்பாடாகி அஸ்தான மண்டபம்  சென்றடைந்து, மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில் புறப்பாடாகி வழி நடை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைதல்நிகழ்வு நடைபெற்றது.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை தெப்ப உற்சவம் !

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத்தேரோட்டம் 16 ம் தேதி வெகு விமர்சையாகநடைபெற்றது. இதனைத் தொடர்ந்துவெள்ளிக்கிழமை காலை 12 மணிக்கு   பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்து மாலை 5 மணிக்கு அபிஷேகம்கண்டருளி இரவு 8 மணிக்கு தெப்பம் உற்சவம்கண்டு வழி நடை கண்டருளி மூலஸ்தானம்சேர்தல் ந‌டைபெற்றது.  தெப்பம் உற்சவத்தில் கோயிலின் இணைஆணையர் அசோக்குமார், கோயில்பணியாளர்கள் பக்தர்கள் உள்ளிட்டோர் திரளாகபங்கேற்றனர்.

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP