சேலம்: மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி!

சேலம் மத்திய சிறையில் சிறைக்கைதி ஒருவர் பிளேடால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சேலம்: மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி!

சேலம் மத்திய சிறையில் சிறைக்கைதி ஒருவர் பிளேடால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாமாக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவன் பிரகாஷ். இவர் கொலை முயற்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று தேவன்  பிரகாஷ் அவரது அறையில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு  முயன்றுள்ளார்.

இதை கண்ட சிறைக்காவலர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சிறைக்காவலர்கள் தரைகுறைவாக  பேசி அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP