சேலம்: பிரதமர் சமையல் எரிவாயு திட்ட விழிப்புணர்வு...!

இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் சமையல் எரிவாயு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேலத்தில் நடைபெற்றது.
 | 

சேலம்: பிரதமர் சமையல் எரிவாயு திட்ட விழிப்புணர்வு...!

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற பிரதமர் சமையல் எரிவாயு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். 

இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் சமையல் எரிவாயு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்டமுத்தாம்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது. மத்திய அரசு மக்கள் தொடர்பு கள உதவி அலுவலர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வேடியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பிரதமரின் சமையல் எரிவாயு திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட  கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் ஓமலூர் வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அருள்பிரகாஷ்,  சேலம் தெற்கு மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகானந்தம், அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP