சேலம்: மர்மமான முறையில் நிர்வாணமாக இறந்து கிடந்த காதலர்கள்!

சேலத்தில், காதல் ஜோடி மர்மமான முறையில் காருக்குள் நிர்வாணமாக இறந்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சேலம்: மர்மமான முறையில் நிர்வாணமாக இறந்து கிடந்த காதலர்கள்!

சேலத்தில், காதல் ஜோடி மர்மமான முறையில் காருக்குள் நிர்வாணமாக இறந்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம்மாவட்டம் செவ்வாய்பேட்டை சாய்பாபா தெருவில் வசித்து வருபவர் சுரேஷ் (22). வெள்ளிப்பட்டறை தொழில் செய்து வரும் இவர் வழக்கமாக இரவு 10 மணிக்குள் வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடுதிரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். 

அப்போது, முன்சீப் தெருவில் உள்ள அவர்களுக்கு சொந்தமான கார் செட் முன்பு சுரேஷின் இருசக்கர வாகனம் நிற்பதை கண்டு கார் செட் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவை திறக்காததால், உள் பக்கமாக பூட்டப்பட்ட கதவை ஒருவழியாக திறந்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இளம்பெண்ணுடன் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சேலம் குகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவி ஜோதி (19) என்பதும், சுரேசும் ஜோதியும் காதலர்கள் என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து, காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணங்களால் தற்கொலையா? கொலையா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இருப்பினும் இந்த காதல் ஜோடி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்  பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலையா? தற்கொலையா என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP