சேலம் உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்!

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 | 

சேலம் உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்!

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சேலம் இரும்பாலை கடந்த 1981-ம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ஆலைக்காக 3 ஆயிரம் விவசாயிகள் தங்களின் நிலத்தை வழங்கினர். சேலத்தில் உள்ள கஞ்சமலையில் இருந்து இரும்புதாதுக்களை எடுத்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த இரும்பாலையில் உருட்டாலை மட்டும் முதலில் செயல்பாட்டுக்கு வந்தது. பிறகு விரிவாக்கத்தின் போது உருக்காலையாக மாற்றம் பெற்றது.

இதன்மூலம் தற்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கார்பன்சீட் ஸ்டீல் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை பார்த்து வருகின்றனர். 3 ஆயிரம் பேர், மறைமுக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சேலம், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் உள்ள 3 இரும்பாலைகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்காக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

இதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, தொழிலாளர்கள் இன்று தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP