சேலம்: பாதுகாப்பான அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

சேலம் மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பான அறைகளில் வைத்து இன்று சீல் செய்யப்பட்டன.
 | 

சேலம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி , சேலம் மேற்கு ,சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில்  உள்ள தனித்தனி  பாதுகாப்பு அறைகளில் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு  வைக்கப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ரோகிணி மற்றும் தேர்தல் பார்வையாளர் ராஜேஷ் மஞ்சு மேற்பார்வையில் ஆறு சட்டமன்ற தொகுதி ஸ்ட்ராங் ரூம்களும் சீலிடப்பட்டது.

சீலிடப்பட்ட ஆறு அறைகளுக்கும்  3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஸ்ட்ராங் ரூம்  பகுதியிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாகவும்,  சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP