Logo

சேலம்: டிஜிட்டல் திரை கொண்ட வாகனம் மூலம் விழிப்புணர்வு

சேலத்தில், சாலைவிதிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைக்கு எதிரான விழிர்ப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் திரை கொண்ட வாகன பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 | 

சேலம் மாநகர காவல்துறை சார்பில், எல்.இ.டி திரை பொருத்தப்பட்ட வாகனம் மூலம், சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வாகனங்கள் நின்று போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விளம்பர படங்கள் திரையிட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த வாகனம் நிறுத்தப்பட்டு, சுமார் 500 மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சேலம் மாநகரத்தில் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த புது முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP