சேலம்: நாய்கள் தொல்லை அதிகரிப்பு... பொதுமக்கள் அவதி...!

சேலம் அன்னதாப்பட்டி அருகே 4 வயது சிறுனை அங்கள்ள தெரு நாய் ஒன்று கடித்ததில், சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்க போராடி வருகிறான். மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை.
 | 

சேலம்: நாய்கள் தொல்லை அதிகரிப்பு... பொதுமக்கள் அவதி...!

சேலம் அன்னதாப்பட்டி அருகே 4 வயது சிறுனை அங்கள்ள தெரு நாய் ஒன்று கடித்ததில், சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்க போராடி வருகிறான். 

சேலம் அன்னதானப்பட்டி அருகில் உள்ள நெத்திமேடு குமர கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் விமல் என்பவரது மகன் தக்க்ஷாந்த். (வயது 4) தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி.படித்து வருகிறான். சிறுவன் வசிக்கும் பகுதியில் தெரு நாய்கள் அதிகம் உள்ளது. இந்த நாய்கள் பொது மக்களையும், சிறுவர்களையும் கடித்து வந்தது. இதுபற்றி பொதுமக்கள் சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் நாய்களை அப்புறப்படுத்த முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் சிறுவன்  தக்க்ஷாந்த் நேற்று காலை தனது வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருக்கும் போது, அப்போது அங்கு கூட்டமாக வந்த நாய்களில் ஒன்று தக்க்ஷாந்த் முகத்தில் கடித்து குதறியது. இதில் சிறுவன் படுகாயமடைந்தான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் ஓடி வந்து நாயை விரட்டி விட்டு சிறுவனை காப்பாற்றி சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். நாய் கடித்ததால் சிறுவனின் கன்னம் மற்றும் கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.  இதனையடுத்து உடனே டாக்டர்கள்  சிறுவனுக்கு தையல் போட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  மேலும் சிறுவனின் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். 

இப்பகுதியில் உள்ள இந்த தெரு நாய்களை உடனே பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP