சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.
 | 

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. 

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்தவர். ஆனால், நெல்லை மாவட்டம் பேட்டை நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ள இவர், "சாய்வு நாற்காலி" என்ற நாவலுக்காக 1997ல் சாகித்ய அகாடமி விருதை பெற்றார். 

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP