திருச்சியில் ருத்ர சாந்தி யோகா ஆலயம் வெள்ளி விழா!

உயிர் கொல்லாமை தடை சட்டம் ,ஜீவகாருண்ய சார்பாக தடை சட்டம் அமைக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் தமிழக அரசுக்கும், கடிதம் அனுப்ப திட்டம் .
 | 

திருச்சியில் ருத்ர சாந்தி யோகா ஆலயம் வெள்ளி விழா!

உயிர் கொல்லாமை தடை சட்டம் ,ஜீவகாருண்ய சார்பாக தடை சட்டம் அமைக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் தமிழக அரசுக்கும், கடிதம் அனுப்ப திட்டம் .

திருச்சியில் ருத்ர சாந்தி யோகா ஆலயம் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் யோகாசன மாநாடு நடைபெற உள்ளதாக ருத்ர சாந்தி யோகா மைய நிறுவனர் கிருஷ்ணகுமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் அப்போது அவர் கூறுகையில்;

நவம்பர் 22 ,23 ,24,என 3 நாட்கள் நடைபெறும் இந்த யோகாசன மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் யோகாசனம் என்பது உலகம் முழுவதும் பல்வேறு மதங்களை கடந்து யோகாசன முக்கியத்தை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வருகிறது எனவும்.. உலகம் முழுவதும் யோகாசனம் பரவி உள்ளது. இதனை வலியுறுத்தி தான் இந்த மாநாடு நடைபெற உள்ளது,மேலும் இந்திய கலாச்சாரத்தில் உயிர்க் கொல்லாமை வள்ளல் பெருமான், திருவள்ளுவர், திருமூலரும், கூறியிருப்பது போல் உயிர் கொல்வது பாவம் ஒரு உயிரைக் கொன்று சாப்பிடுவது அதைவிட பெரிய பாவம் இதனை வலியுறுத்தி உயிர் கொல்லாமை தடை சட்டம் ,ஜீவகாருண்ய சார்பாக தடை சட்டம் அமைக்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும் ,தமிழக அரசுக்கும் விரைவில் கடிதம் அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP