திருச்சி விமான நிலையத்தில் ரூ. 21 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
 | 

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 21 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் மதிப்புடைய கடத்தல்  தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டோ விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது திருச்சியைச் சேர்ந்த வினோத் குமார், சரவணகுமார் மற்றும் ஜபருல்லா ஆகியோர் தங்கள் பேண்ட் டிக்கெட் பாக்கெட்டில் 600 கிராம் எடை கொண்ட ரூ 20. 90 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP