பெல் வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய கொள்ளையன்!

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ. 1.43 கோடி கொள்ளையடித்த முகமூடி கொள்ளையனின் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
 | 

பெல் வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய கொள்ளையன்!

திருச்சி  பெல் நிறுவன வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ. 1.43 கோடி கொள்ளையடித்த முகமூடி கொள்ளையனின் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெல் நிறுவன வளாகத்தில் பெல்  தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி (BHEL C0 - opeartive Bank) செயல்பட்டு வருகிறது. இவ்வங்கிக்கு திருச்சி  காட்டூர், தெப்பகுளம், திருவெறும்பூர் டவுன்ஷிப் உள்ளிட்ட 4 இடங்களில் கிளைகள் உள்ளது. இவ்வங்கியில் பிரத்யேகமாக (BHEL) பாரத மிகு மின் நிறுவனத்தில்  பணிபுரியும் பொறியாளர்கள், மேலாளர்கள்,ஊழியர் மற்றும் காவலர்கள் என 8,500 க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 

பெல் நிறுவன 24-வது கட்டிட கிளையில் உள்ள பெல் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் மேலாளர்- காசாளர் உட்பட 6 பேரும் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். கடந்த நவம்பர் 1- ம் தேதி  காலை 10 மணிக்கு வழக்கம் போல் ஊழியர்கள் பணிக்கு வந்த போது அலுமினிய கம்பிகளால் ஆன ஜன்னல்கள் கழட்டப்பட்டு உள்ளே இருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட சுமார்  1.43  கோடி கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல்துறையினர் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரித்து வரும் நிலையில், தற்போது இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தனி ஒருவன் என்பது தெரியவந்துள்ளது. அதற்கான சிசிடிவி காட்சிகள் தற்போது காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP