விஷவாயு தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

கோவை சிங்கநல்லூர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
 | 

விஷவாயு தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

கோவையில், பாதாள சாக்கடை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். 

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பினை சரிசெய்யும் பணியில், அந்தக் குடியிருப்பு சங்கத்தினர், மாநகராட்சி அனுமதியின்றி இருவரை ஈடுபடுத்தினர். பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபட்டபோது, விஷவாயு தாக்கி இருவரும் உயிரிழந்தனர்.  

இந்நிலையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடைச்சட்டம் 2013-ன்படி, உயிரிழந்த முருகன் (37), பாண்டித்துரை (29) ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் ஐயம்மாள், கீர்த்தனா ஆகியோரிடம் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை மாநகராட்சி நிதியிலிருந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், வி.சி. ஆறுக்குட்டி, பி.கஸ்தூரிவாசு, காவல் ஆணையாளர் சுமித் சரண், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP