ஏழை, எளிய மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த ரோட்டரி சங்கம்!

கோவை அரசு பள்ளி மாணவ, மாணவிகளை இலவசமாக 3 நாள் கல்வி சுற்றுலா சென்றுவிட்டு விமானத்தில் வீடு திரும்பிய மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
 | 

கோவை மாவட்டம் கோட்டை பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் 32 ஏழை, எளிய மாணவ மாணவிகளை கடந்த 21 ஆம் தேதி கோவை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பயணமாக ரயில் மூலம் பெங்களூர் அழைத்து சென்றனர். அங்கு 3 நாட்களாக பல்வேறு கலாச்சார நடைமுறைகள் மற்றும் படிப்புகள் சார்ந்த கண்காட்சிகளை பார்வையிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பிய மாணவர்களை  ஆகாயத்தை சுற்றி காட்டும் வகையில் பெங்களூரில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் அழைத்து வந்தனர். விமான நிலையத்தில் காத்திருந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை கட்டியணைத்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இது குறித்து மாணாக்கர்கள் பேசுகையில், "தாங்கள் முதன் முறையாக வெளி உலகத்தை பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. விமான பயணம் மிகவும் அழகாக இருந்தது. அங்குள்ள கலாச்சாரம் பண்புகள் பிடித்துள்ளதாகவும், எங்கள் போல் உள்ள ஏழ்மையான மாணவர்களை அழைத்து சென்று சந்தோஷபடுத்தியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP