வெளியூர் செல்வோரின் வீடுகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள்!

கோவையில் சாய்பாபாகாலனி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

வெளியூர் செல்வோரின் வீடுகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள்!

கோவையில் சாய்பாபாகாலனி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலாவிற்கு சென்று வருகின்றனர். அத்தகைய நபர்களின் வீடுகளைக் கண்டறிந்து கொள்ளையர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் சாய்பாபாகாலனி அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (50). இவர் கடந்த 30-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சேலம் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 15 பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பழனிச்சாமி சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம்  6-வது வீதியை சேர்ந்த முகமதுயூனீஸ் (38) என்பவர் கடந்த 1-ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 10 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

வெளியூர் செல்பவர்கள் தங்களின் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டு, தங்கள் பயணத்தை தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பதுடன், காவல்துறையினர் ரோந்து பணிகளை அதிகரிப்பதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP