மண் மூடியதால் பின்னடைவு: விஜயபாஸ்கர்

குழந்தை சுஜித் சிக்கியுள்ள ஆழ்துறை கிணற்றில் மண் மூடியுள்ளதால் குழந்தையை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

மண் மூடியதால் பின்னடைவு: விஜயபாஸ்கர்

குழந்தை சுஜித் சிக்கியுள்ள ஆழ்துறை கிணற்றில் மண் மூடியுள்ளதால் குழந்தையை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

திருச்சி நடுகாட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "குழந்தை சுஜித்தை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குழந்தையை கயிறு கட்டி வெளியே கொண்டு வருவதற்காக குழந்தையின் கையில் கயிறு கட்டப்பட்டது. ஒரு கையில் கயிற்றை கட்டி சுருக்கு போடப்பட்டது. இரண்டாவது கையில் சுருக்கு போடுவதில் காலதாமதம் ஏற்பட்டது. முதல் முறை சுருக்கு போட்டு குழந்தையை இழுக்க முயன்றபோது, இரண்டாவதாக போட்டு சுருக்கு கழன்றுவிட்டது. இரண்டாவது முறையும் அதேபோன்று இரண்டாவது கையில் போடப்பட்ட சுருக்கு கழன்றுவிட்டது. மூன்றாவது முறையாக அதிகாலை 4 மணியளவில் குழந்தையின் கையில் சுருக்கு போட்டு இழுக்க முயன்றபோது, யாரும் எதிர்பார்க்காதவகையில் 2 கைகளில் கட்டப்பட்ட கயிறும் கழன்று குழந்தை சுமார் 70 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டான்.

அப்போதும், குழந்தை மூச்சுவிடம் சத்தம் கேட்டது. இதனிடையே குழந்தையின் மீது சேறு விழுந்ததால் குழந்தையின் சத்தத்தை கேட்க முடியவில்லை. குழந்தைக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் வந்து கொண்டிருக்கின்றனர். நிச்சயம் குழந்தையை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையுள்ளது.

வெளிநாடுகளில் இருந்தும் பலர் குழந்தையை மீட்பதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மீட்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்துவருகிறார். குழந்தையை மீட்பதில் மட்டுமே சிரமம் உள்ளது. வெளியே வந்த பிறகு குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன என தெரிவித்தார். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP