ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி: பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை!

வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 | 

சேலம் மாவட்டம் வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு சந்தைப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏரிக்கரை ஓரமாக புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து இணைப்பு பெற்று கிராம நிர்வாக அலுவலகம் முன் புறம் நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தனர். சுமார் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை தண்ணீர் விநியோகிக்கவில்லை என்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டவரவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உடனடியாக இந்த நீர்த் தேக்கத் தொட்டியில் தண்ணீர் தேக்கி மக்கள் பயன்பாட்டிற்கு விடும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP