கடத்தப்பட்ட ஆசிரியை மீட்பு... 3 பேர் கைது !

கும்பகோணத்தில் நேற்று கடத்தப்பட்ட ஆசிரியை காயத்ரி இன்று காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளார். ஆசிரியையை கடத்திய கார்த்திக் உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

கடத்தப்பட்ட ஆசிரியை மீட்பு... 3 பேர் கைது !

கும்பகோணத்தில் நேற்று கடத்தப்பட்ட ஆசிரியை காயத்ரி இன்று காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளார். ஆசிரியையை கடத்திய கார்த்திக் உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள ஏ.ஜே.சி. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் காயத்ரி என்பவர் நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர்களால் காரில் கடத்தப்பட்டார். கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய  இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கடத்தப்பட்ட ஆசிரியை திருச்சி சமயபுரம் அருகே இருப்பதாக தெரியவந்தது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் கும்பகோணம் நோக்கி வருவதாகவும் தெரிந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் கபிஸ்தலம் அருகே இந்த காரை வழிமறித்தனர் .இதில் ஆசிரியை  காயத்ரியை கடத்திய கார்த்திக் அவரது நண்பர்கள் பரணி மற்றும் ராகுல் ஆகியோரை கைது செய்ததுடன், கடத்தப்பட்ட ஆசிரியை காயத்ரியையும் பத்திரமாக மீட்டனர். கைது செய்யப்பட்ட கார்த்திக், பரணி, ராகுல் ஆகியோரிடம் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் கார்த்திக் ஆசிரியை காயத்ரியை கடந்த 7 ஆண்டுகளாக ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததும், கார்த்திக்கின் காதலை பலமுறை காயத்ரி நிராகரித்ததும் தெரியவந்துள்ளது .நேற்று இரவு முழுவதும் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கார்த்திக் வற்புறுத்தியும், அதனை நிராகரித்ததை தொடர்ந்து காயத்ரியை கும்பகோணத்தில் விட்டு விடலாம் என வந்த போது காவல்துறையினர் பிடித்ததாக கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP