பொய்யை திரும்ப திரும்ப சொல்வது திமுகவின் பாணி: ராமதாஸ்

திமுக வடிகட்டிய பொய்யை கூறி வருவதாகவும், பொய்யை திரும்ப திரும்ப சொல்வது தான் திமுகவின் பாணி எனவும் சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 | 

பொய்யை திரும்ப திரும்ப சொல்வது திமுகவின் பாணி: ராமதாஸ்

பொய்யை திரும்ப திரும்ப சொல்வதுதான் திமுகவின் பாணி என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, சேலத்தில் அவரது உருவசிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அம்பேத்கர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். தற்போது ஸ்டாலின் பேசுவது ஆக்கப்பூர்வமாகவும் இல்லை, அறிவுப்பூர்வமாகவும் இல்லை. பொய்யை திரும்ப திரும்ப சொல்வது திமுகவின் பாணி. சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும்" என வலியுறுத்தினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP