பாரம்பரிய திருவிழாக்களின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அட்டை உறை வெளியீடு!

தமிழ்நாட்டு திருவிழாக்களை மையப்படுத்தும் வகையில், பொங்கள், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அட்டை உறை கோவை தலைமை தபால் நிலையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 | 

பாரம்பரிய திருவிழாக்களின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அட்டை உறை வெளியீடு!

தமிழ்நாட்டு திருவிழாக்களை மையப்படுத்தும் வகையில், பொங்கள், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அட்டை உறை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின்  புகழ்பெற்ற திருவிழா  சிறப்புகளை  எடுத்துத்துரைக்கும் விதமாக பொங்கல், மாரியம்மன் கோவில் குண்டம், நாகூர் ஆண்டவர் கோவில் என 14 வகையான விழாக்களின் வண்ண புகைப்படத்துடன் அஞ்சல் அட்டை உறை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை நேற்று முன்தினம் கோவை தலைமை தபால் நிலையத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டனர்.

பாரம்பரிய திருவிழாக்களின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அட்டை உறை வெளியீடு!

இது குறித்து தபால் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்திய அஞ்சல் துறை தபால் சேவைகள் மட்டும்மில்லாது வங்கி மற்றும் சமூக பணிகளை செய்து வருகிறது. மேலும் மாநில திருவிழாக்களை மையப்படுத்தும் விதமாக  வண்ண புகைப்படங்கள் கொண்டு வாழ்த்து அஞ்சல் அட்டை கவரை தயாரித்துள்ளோம்.

இதில் 14 சிறப்புகளை கொண்டு உருவாக்கி உள்ளோம். குறிப்பாக பொங்கல் விழா குறித்த படங்கள் பிரத்தியேகமாக எடுத்து  உள்ளோம். தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் மாநில தகவல்கள் பதிவு செய்ய உள்ளோம் என தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP