கோவையில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு!

கோவையில் ராம்ராஜ் காட்டன் ஷோரூமின் புதிய கிளையை கோவை மாநகராட்சியின் முன்னாள் மேயர் தொடங்கி வைத்தார்.
 | 

கோவையில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு!

கோவையில் ராம்ராஜ் காட்டன் ஷோரூமின் புதிய கிளையை கோவை மாநகராட்சியின் முன்னாள் மேயர் தொடங்கி வைத்தார். 

பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பதில் அக்கறைகொண்டு தென் மாநிலம் முழுவதும் வெள்ளை நிற ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனையில் சாதனை படைத்து வரும் நிறுவனம் ராம்ராஜ் காட்டன் நிறுவனம். இந்தியாவிலேயே வேட்டிக்கென தனி முத்திரை பதித்து முதலிடத்தில் உள்ள இந்நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு இடங்களில் உள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவையில் தனது புதிய கிளையை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் துவக்கியுள்ளது.

கோவை சாய்பாபாகாலனி என்.எஸ்.ஆர்.சாலையில் துவங்கப்பட்ட இக்கிளையில் தொடக்க விழாவில் கோவை மாநகராட்சியின் முன்னாள் மேயர் வெங்கடாசலம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முதல் விற்பனையை ஹீரோ பேஷன் சுந்தரமூர்த்தி துவக்க சுகுமார் பெற்று கொண்டார்.

கோவையில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு!

செய்தியாளர்களிடம் பேசிய ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் கே.ஆர்.நடராஜன், வெறும் வணிக நோக்கத்திற்காக இந்த நிறுவனம் செயல்படாமல் நலிந்து போன நெசவுத்தொழிலை மீட்டெடுக்கும் விதமாக ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேலைவாய்ப்பை வழங்கி வருவதாக  தெரிவித்தார். மேலும் நமது பாரம்பரிய வேஷ்டி கலாச்சாரத்தை மீட்டெடுத்த பெருமை எங்கள் நிறுவனத்தையே சேரும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு!

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின், வேட்டி மற்றும் சர்ட்டுகளுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பலத்த வரவேற்பு உள்ள நிலையில் தற்போது துவங்கிய புதிய ஷோரூமில்  புதிய ரிங்கிள் வேட்டி, சுபமுகூர்த்த வேஷ்டி, பஞ்ச கஜ வேட்டி உள்ளிட்ட பல வேஷ்டி ரகங்களும், ரிங்கிள், கூல் மற்றும் லினன் சர்ட்டுகள் என, ஏராளமான ரகங்கள் விற்பனைக்கு உள்ளது. வரும் தீபாவளிக்கு புதிய வரவாக, கலர் சர்ட்டுகளுக்கு ஏற்ற நிறத்தில் பேன்சியான பார்டர் வேட்டி ரகங்கள், இளைஞர்களுக்கான வெல்குரோ பாக்கெட் வேட்டிகள், குழந்தைகளுக்கான வேஷ்டி, சர்ட்டுகள் விற்பனைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP