ராமநாதபுரம்: புதிய மின்கம்பங்கள் மாற்றப்பட்டது - நியூஸ் டிஎம் செய்தி எதிரொலி !

கடந்த 30ஆம் தேதி நியூஸ் டிஎம் செய்தியில் வெளியிடப்பட்டதையடுத்து, ராமநாதபுரம், மண்டபம் துணை மின் நிலைய அதிகாரிகள் இன்று (பிப்.2) நடவடிக்கை எடுத்து, புதிய மின் கம்பங்களை அமைத்துள்ளனர். பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
 | 

ராமநாதபுரம்: புதிய மின்கம்பங்கள் மாற்றப்பட்டது - நியூஸ் டிஎம் செய்தி எதிரொலி !

ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் பராமரிப்பின்றி கிடந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைத்து தரக் கோரி அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து கடந்த 30ஆம் தேதி நியூஸ் டிஎம் செய்தியில் வெளியிடப்பட்டதையடுத்து, மண்டபம் துணை மின் நிலைய அதிகாரிகள் இன்று (பிப்.2) நடவடிக்கை எடுத்து, புதிய மின் கம்பங்களை அமைத்துள்ளனர். 

ராமநாதபுரம்: புதிய மின்கம்பங்கள் மாற்றப்பட்டது - நியூஸ் டிஎம் செய்தி எதிரொலி !

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்கு உட்பட்ட சாத்தக்கோன் வலசை பஞ்சாயத்து சுந்தர முடையான் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சீனியப்பா தர்கா செல்லும் வழியில் உயர் அழுத்த மின் கம்பம் உள்ளது. கடந்த மாதம் 30ஆம் தேதி மாலை அதிகமான காற்று வீசியதால் மேலே இருந்து மரத்தின் கிளை ஒடிந்து, மின்கம்பி தரையிலிருந்து தொடும் அளவிற்கு  விழுந்ததால் அவ்வழியே செல்லும் மாணவ மாணவிகள் அச்சத்துடன் சென்றனர்.

ராமநாதபுரம்: புதிய மின்கம்பங்கள் மாற்றப்பட்டது - நியூஸ் டிஎம் செய்தி எதிரொலி !

சுந்தரமுடையான் பேருந்து நிறுத்தம் ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே உள்ள இந்த உயர் மின் கம்பம்  பராமரிப்பற்று எந்த நேரத்தில் கீழே விழுமோ என்று அச்சத்துடன் அப்பகுதி மக்கள் சென்று வந்தனர்.  அந்த மின் கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக கவனித்து வேறு  மின்கம்பம்  மாற்றினால்தான் பொதுமக்கள் உயிர் பயமின்றி அவ்வழியே செல்ல முடியும் என்றும், மாவட்ட நிர்வாகமும் மண்டபம் துணை மின் நிலைய அதிகாரிகளும் உடனே கவனித்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

ராமநாதபுரம்: புதிய மின்கம்பங்கள் மாற்றப்பட்டது - நியூஸ் டிஎம் செய்தி எதிரொலி !

இந்நிலையில் இது குறித்து 30ஆம் தேதி நியூஸ் டிஎம் செய்தியில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, மண்டபம் துணை மின் நிலைய அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுத்து, புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மண்டபம் ஊராட்சி ஒன்றிய மக்கள் நியூஸ் டிஎம் செய்திக் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP