தவறவிட்ட கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார் 

திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயிலில் தவறவிட்ட ஹேன் பேக்கை உரியவரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.தொலைத்த அனைத்து நகைகளையும் பேக்கையும் உடனடியாக மீட்டுக்கொடுத்த ரயில்வே போலீசாருக்கு புஷ்பாமலர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
 | 

தவறவிட்ட கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார் 

திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயிலில் தவறவிட்ட ஹேன் பேக்கை உரியவரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

சென்னை கொசஸ்தலையை சேர்ந்தவர் புஷ்பா மலர். இவர் நேற்று நெல்லையில் இருந்து தாம்பரம் ரயில் மூலமாக சென்னை வந்துள்ளார்.  தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய புஷ்பா மலர். தனது கைப்பையை ரயிலில் தவறவிட்டதாக சென்னை எழும்பூர் ரயில்வே காவல்துறை ஆய்வாளர் மோகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து,  ரயில்வே காவல்துறை ஆய்வாளர் மோகன்  S10 பெட்டியை ஆய்வு செய்ய ரயில்வே காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தவறவிட்ட கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார் 

இதனை தொடர்ந்து ரயில்வே காவல‌ர்கள் கைப்பையை மீட்டு புஷ்பா மலரிடம் ஒப்படைத்தனர். தொலைத்த அனைத்து நகைகளையும் பையையும் உடனடியாக மீட்டுக்கொடுத்த ரயில்வே போலீசாருக்கு புஷ்பாமலர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP