வேலூர் தொகுதியில் ரெய்டு; ரூ.27.76 லட்சம் கைப்பற்றல்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் 27.76 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

வேலூர் தொகுதியில் ரெய்டு; ரூ.27.76 லட்சம் கைப்பற்றல்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் 27.76 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், வேலூர் தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது. 

வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததால், அங்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கான மறுதேர்தல் வருகிற ஆகஸ்ட்5ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், இன்று தேர்தல் அதிகரிகளோடு வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரூ. 27.76 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP