ரஃபேல் விவகாரத்தால் தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்படாது: தம்பிதுரை

ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்றும், இவ்விவகாரத்தால் தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்படபோவதில்லை என்றும் மக்களவை துணை சபாநாயகரும், கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
 | 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின்  கூறுவதை நிரூபித்துவிட்டு அந்த கல்லூரி பட்டியலை அவர்களுக்கு சொந்தமான அனைத்து மொழி சேனல்களிலும் தினமும் விளம்பரப்படுத்திக்கவும் என ஆவேசகமாக கூறினார். 

ரபேல் விவகாரத்தை நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,  ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை, பாஜக தவறு செய்ததாக எனக்கு தெரியவில்லை. இதனால் தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்படப்போவது இல்லை என கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP