சொத்து தகராறு : தாயை கொலை செய்த முன்னாள் எம்.பி.யின் மகன்!

சொத்து தகராறு காரணமாக தாயை கொலை செய்துவிட்டு தப்பியோடிய முன்னாள் அதிமுக எம்.பி. குழந்தைவேலுவின் மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 | 

சொத்து தகராறு : தாயை கொலை செய்த முன்னாள் எம்.பி.யின் மகன்!

சொத்து தகராறு காரணமாக தாயை கொலை செய்த முன்னாள் அதிமுக எம்.பி.யின் மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரியை பூர்வீகமாக கொண்டவர் ரத்தினம் (63). இவர் முன்னாள் அதிமுக எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி ஆவார். சென்னை பெசன்ட் நகர் பீச் சாலையில் உள்ள தனது மகன் பிரவீண் (36) வீட்டிற்கு இவர் நேற்று காலை சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மகனுக்கும், தாய்க்கும் இடையே சொத்து பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பிரவீண் தன் தாய் ரத்தினத்தை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார் ரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், "ரத்தினத்தின் மகன் பிரவீண் இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறார். அவருக்கு அங்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாக சொத்துப் பிரச்சனை காரணமாக பிரவீன் தமிழகம் வந்துள்ளார்.

சொத்து பிரச்னையைத் தீர்ப்பதற்காக தாய் ரத்தினம் திருப்பூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து நேற்று காலை தான் மகனைச் சந்திப்பதற்காக  பெசன்ட் நகர் வந்துள்ளார். பிரச்னையை பேசித் தீர்க்கும்போது தான், பிரவீண் ஆத்திரத்தில், தன் தாயை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP