கோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்!

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ்பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில், அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்!

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ்பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில், அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல் எல்லைக்கு உட்பட்ட பூளுவாம்பட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கும் இந்த முகாமில் சட்டவிரோத சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அதேபோல 3ம்-நம்பர் லாட்டரி விற்பனையும் இந்த முகாமில் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய அகதிகள் முகாமில் இருக்கும் சமூக விரோதிகளால் நிம்மதி இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சமூக விரோதிகளின் செயல்களால் இந்த முகாமில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது. இப்படியிருக்க நேற்று 3ம் நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வரும் சிவனேசன் என்பவருக்கும் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய விஜயராஜ் (23) என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சிவனேசன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்து வந்த ஆலாந்துறை போலீசார் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் விஜயராஜை கைது செய்து, போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், முதலுதவி சிகிச்சைகள் முடிந்து எக்ஸ்ரே எடுக்க செல்லும் பொழுது விஜயராஜ் காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடினார். விஜயராஜை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP