சிறையில் கைதி உயிரிழப்பு!

சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இது குறித்து சிறைத்துறை மேலதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

சிறையில் கைதி உயிரிழப்பு!

சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 58). இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில், குருசாமி இன்று மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சிறைத்துறை அதிகாரிகள் சிறையில் உள்ள மருத்துவருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சிறைத்துறை மேலதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP