போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கைது!

இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
 | 

போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கைது!

இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  

சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், 7வது ஊதியக்குழு பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 2009 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கைது!

இதேபோல், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், நகல் ஆணை எரித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP