நடுரோட்டில் பலூன் விற்கும் சிறுவனுக்கு முத்தம் கொடுத்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

வங்க மொழி பட நடிகையான நுஸ்ரத் ஜஹான் சாலையில் பலூர் விற்றுக்கொண்டிருந்தவரின் ஒன்றரை வயது சிறுவனை தூக்கிக் கொஞ்சிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
 | 

நடுரோட்டில் பலூன் விற்கும் சிறுவனுக்கு முத்தம் கொடுத்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

பொதுவாகவே பெண்களுக்கு ஈர மனசுன்னு சொல்வாங்க... அதிலும், எப்போதும் கேமிரா ப்ளாஷ் வெளிச்சம் சூழ புகழின் வளையத்திற்குள் வலம் வரும் நடிகைகளுக்கு அந்த ஈரமான மனசு இன்னும் விசாலமாகும். அப்படி வங்க மொழி பட நடிகையும், தற்போது எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான  நுஸ்ரத் ஜஹான் சாலையில் பலூன் விற்றுக் கொண்டிருந்தவரின் ஒன்றரை வயது சிறுவனை தூக்கிக் கொஞ்சிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

வங்க மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நுஸ்ரத் ஜஹான். திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த நுஸ்ரத், தற்போது  நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவருக்கு திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். 

நடுரோட்டில் பலூன் விற்கும் சிறுவனுக்கு முத்தம் கொடுத்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில படங்களை பகிர்ந்திருந்தார். அதில் பலூன் விற்று கொண்டிருந்தவரின் ஒன்றரை வயது சிறுவனை மடியில் உட்கார வைத்து, கட்டியணைத்து முத்த கொடுக்கும் புகைப்படங்கள் இருந்தன. இந்த புகைப்படங்கள் பெரும்பாலான இணைதளவாசிகளை ஈர்த்துள்ளது. இப்படத்திற்கு கிட்டத்தட்ட 59 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். பலரும் வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

 

 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP