பொன்னாளி அம்மன் கோவில் மின்விளக்குகளை சீரமைக்க கோரிக்கை!

வீரகனூர் அருகே சொக்கனூர் அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பொன்னாளி அம்மன் கோவில் மின்விளக்குகளை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 | 

பொன்னாளி அம்மன் கோவில் மின்விளக்குகளை சீரமைக்க கோரிக்கை!

வீரகனூர் அருகே சொக்கனூர் அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பொன்னாளி அம்மன் கோவில் மின்விளக்குகளை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட சொக்கனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொன்னாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினந்தோறும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வருவதுண்டு. இந்த கோவிலின் முகப்புப் பகுதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எரியாமல் உள்ளதால் கோவில் வெளிச்சமின்றி காணப்படுவதாகவும், இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும்  இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பக்தர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

மேலும் கோவிலின் உட்புறத்தில் உள்ள  சிலைகள் சில சேதமடைந்துள்ளதாகவும், பக்தர்கள் குளிப்பதற்கு குளியல் அறை மற்றும் கழிவறை வசதி கூட இல்லாத அவலநிலை இருப்பதாகவும் ஆனால் கோவில் நிர்வாகத்தினர் இதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை என்றும் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பொன்காளியம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பணம் வங்கியில் கிடப்பதாகவும், ஆனால் கோவில் மராமத்துப் பணிகள் செய்யப்படாமல் அலங்கோலமாக இருப்பதால் பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்துள்ளதோடு, பக்தர்கள் முகசுழிப்புடண் வந்து செல்வதாகவும் கோவில் மீது அக்கறையுள்ள பக்தர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆகவே, உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் கோவில் சீரமைப்பின் அவசியத்தை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP