பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தமிழக அரசின் ஆணைப்படி சிபிசிஐடி போலீசார் சிபிஐயிடம் இன்று ஒப்படைத்தனர்.
 | 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி போலீசார் சிபிஐயிடம் இன்று ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சியில்  கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  இதனிடையே இவ்வழக்கில் தொடர்புடைய 4 நபர்களும் பல்வேறு பெண்களை பாலியல் தொந்தரவு செய்து எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இவர்கள் மீதான வழக்குகள் கடந்த மார்ச் 13ம் தேதி  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அப்போது தமிழக அரசு இவ்வழக்கை மத்திய புலனாய்வு துறை விசாரணை நடத்த ஆணை வெளியிட்டது. 

இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுப்பதற்கு முன் சி.பி.சி.ஐ.டி தென் மண்டல காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன், இவ்விவகாரம் குறித்து 40 சாட்சிகளை விசாரித்ததோடு, வாக்குமூலம் அடங்கிய ஆவணங்கள் மற்றும் வழக்கு ஆதாரங்களை தமிழ்நாடு தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு!

இந்நிலையில், தமிழக அரசின் ஆணைப்படி வழக்கு சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி இன்று சிபிஐயிடம் ஒப்படைத்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP